தொருவளூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது

இராமநாதபுரம் அருகே தொருவளூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பஜூருதீன் தலைமை வகித்தார்.ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இவ்வூராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழர் விழாவாக கருதப்படும் பொங்கல் விழா மதங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கம் உள்ளது. தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். முஸ்லிம்களில் பல குடும்பங்களில் பொங்கல் நாளன்று சர்க்கரை பொங்கலுடன் 16 வகை காய்கறிகள் சமைத்து சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்ணும் வழக்கம் இன்றும் உள்ளது.


Leave a Reply