பொங்கல் பரிசு வழங்க ஏதுவாக வரும் 10 ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், வரும் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பரிசுப்பொருட்கள் விநியோகிக்கப்படும். இதன்காரணமாக ரேஷன் கடைகளில் பொது விடுமுறை தினமான இரண்டாவது வெள்ளிக்கிழமை அதாவது வரும் 10 ஆம் தேதி வழக்கம்போல் ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக ஜனவரி 16ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடிமைப்பணி அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் விளையாடி அசத்தினார். சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் குடிமைப்பணி அதிகாரிகள் இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கான தொடக்க விழாவில் வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை பேண்ட் அணிந்து முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றார். விழாவில் பேசிய அவர் மன அழுத்தத்தை சமாளிக்க விளையாடுவது அவசியம் என அறிவுறுத்தினார். மேலும் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம் என்றும் அவர் கூறினார். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். இதையடுத்து கிரிக்கெட் மட்டையை பிடித்த முதலமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் வீசிய பந்தை விளாசினார்.