விலை உயர்வுக்கு கண்டனம்..! வெங்காயத்தை வங்கியில் அடகு வைக்கும் நூதன போராட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி வெங்காயத்தை வங்கியில் அடகு வைக்கும் நூதன போராட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ராமேஸ்வரம் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

கழுத்தில் வெங்காய மாலை அணிந்தபடி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அதற்கு காரணமான பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

பின்னர் தங்கம் போல நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெங்காயத்தை அடகு வைக்கப் போவதாக கூறி போராட்டக்காரர்கள் வங்கிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply