தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயமானது.கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி புதிய மாவட்டமாகவும், விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு தனி மாவட்டமாகவும், வேலூர் மாவட்டத்தை 3 ஆகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவை தனி மாவட்டமாகவும் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி தென்காசி மாவட்டம் தொடக்க விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றனர்.