--- --:--:-- --

தத்து கொடுக்கப்பட்ட மகன் 41 ஆண்டுகளுக்கு பின் தாயை சந்தித்த நெகிழ்ச்சி தருணம்

1

வறுமையின் காரணமாக டென்மார்க் தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்ட மகன் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் உள்ள தனது தாயைத் தேடி கண்டறிந்தார்.

 

சென்னை மணலியில் சேர்ந்த தனலட்சுமி கலியமூர்த்தி தம்பதி வறுமையின் காரணமாக கடந்த 1976 ஆம் ஆண்டு தனது இரண்டு மகன்களை டென்மார்க் தம்பதிகளுக்கு தத்து கொடுத்தனர். டேவிட் ராஜன் என்ற மகன்கள் சிறு வயதில் இருந்தபோது டென்மார்க் தம்பதிகள் அனுப்பிய புகைப்படத்தை மட்டுமே அவ்வப்போது பார்த்து ஆறுதல் அடைந்து வந்தார் தாய் தனலட்சுமி.

 

தாயுடன் இருந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு சிறுவயதிலிருந்தே டேவிட் தாய் தனலட்சுமியை தேடி வந்தாராம். தற்போது 41 ஆண்டுகளுக்கு பிறகு சமூக ஆர்வலர்கள் உதவியுடன் சென்னையில் தாயை தேடி வந்த டேவிட் தனது வீட்டை கண்டறிந்து தனலட்சுமியை சந்தித்து பாச மழை பொழிந்தார்.

 

குழந்தை பருவத்தில் பிறந்த தனது மகனை முதிர்பருவத்தில் கண்டதும் உச்சி முகர்ந்து முத்தமிட்டு தாய் தனலட்சுமி கதறி அழுதார். மொழி தெரியாமல் தாயும் மகனும் அன்பை பரிமாறிக் கொண்ட காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon