--- --:--:-- --

கள்ளகாதலுக்காக மகனை கொன்ற தாய் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது!

12

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் தலைமறைவாக இருந்த தாயை 7 ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்பது வயது மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு, கைதாகி சிறை சென்று இருவரும் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகினர்.

 

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி குட்டி. இவரது மனைவி காளியம்மாள். இவரது 9 வயது மகன் நாகேஷ்குமார் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலை கிழக்கொட்டையூர் பகுதியை சேர்ந்த 35 வயதான பெருமாளுடன் 36 வயதான காளியம்மனுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. கணவருக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

 

இது தனது மகன் நாகேஷ் குமாருக்கு தெரியவந்துள்ளது. கணவரிடம் இதை சொல்லி விடுவார் என பயந்த காளியம்மாள் கள்ளக்காதலன் பெருமாளுடன் சேர்ந்து மகனை கொலை செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து மகனை இன்ப சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதாக கூறி கடந்த 2013 ஆம் ஆண்டு ஒகேனக்கல்லுக்கு அழைத்து சென்று பெருமாளுடன் சேர்ந்து காளியம்மாள் கொலை செய்தார்.

 

இந்த வழக்கில் இருவரையும் கைது செய்த போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர். 2013 ஆம் ஆண்டில் ஜாமீன் பெற்று வெளியில் வந்த இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து அவர்களை 7 ஆண்டுகளாக வேலூர் மாவட்ட போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் ஏலகிரி மலை பகுதியில் நிலாவூர் அம்மன் கோயில் அருகே இருவரும் தலைமறைவாக வாழ்வதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல் வேலூர் அருகே மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கோட்டை காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சந்தியாவுக்கு கோட்டை காலனி பகுதியை சேர்ந்த அஜீத் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

 

இதனை அறிந்த மணிகண்டன் சந்தியா மற்றும் அஜீத் குமாரை பலமுறை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மனைவி சந்தியா தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னையும், தன் பிள்ளைகளையும் கணவரிடம் இருந்து காப்பாற்றி விவாகரத்து பெற்று தருமாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

 

இதை அறிந்த அஜித் குமார் மணிகண்டனுக்கு போன் செய்து உன் மனைவி உன்னை விட்டு ஓடிவிட்டாராமே என்று கூறி கேலி பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது தம்பிகள் சுகுமார், ராஜ் ஆகியோருடன் சேர்ந்து அஜித் குமார் மற்றும் அவரது தம்பி ஹரிஹரனை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

 

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான மணிகண்டன் சகோதரர்கள் சுகுமார், ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon