கொடைக்கானலில் பேருந்துக்குள் மழைநீர் வடிந்ததால் குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்தனர். கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் போலந்து ஊரிலுள்ள வத்தலக்குண்டு செல்லும் பேருந்தில் பயணிகள் பயணம் செய்தனர். அப்போது பேருந்து மேற்பகுதியில் கசிவு ஏற்பட்டு பயணிகள் அனைவரும் நனைந்தவாறு பயணித்தனர். குடை பிடித்தவாறு பயணம் செய்தனர்.
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து வத்தலகுண்டு போக்குவரத்து மேலாளரிடம் கேட்டபோது மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேகமலை இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த தொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியகுளம் பகுதியில் பாயும் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரண்டு நாட்களாக கனமழை யும் சோத்துப்பாறை அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் கல்லாறு பெரியகுளம் பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இதனால் கல்லாறு கும்பக்கரை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறுகளில் நீரில் கலப்பதால் அந்த நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வடுகப்பட்டி ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ஆற்றை கடக்க அல்லது ஆற்றில் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.