12 மாற்றுத்திறனாளி ஜோடிகளை ஒன்றிணைத்து ” நான் சிறப்பு மிக்கவன் 2020” எனும் காலண்டரை வெளியிட்ட தனியார் அமைப்பினர் !!!
இந்திய நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்து 12 மாற்றுத்திறனாளி ஜோடிகளை ஒன்றிணைத்து ” நான் சிறப்பு மிக்கவன் 2020” எனும் காலண்டரை கோவையில் வெளியிட்ட தனியார் அமைப்பினர்.கடந்த நான்கு ஆண்டுகளாக கோவையில் சுவர்கா பவுண்டேஷன் சார்பில் 12 மாற்றுத்திறனாளிகளின் புகைப்படங்களுடன் கூடிய காலண்டரை வெளியிட்டு மிக அதிகமான வெற்றியினையும், மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டிற்கான காலண்டர் வெளியிட்டு விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி, கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் சுமித்சரண், சங்கரா கண் மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் ஆர்.வி.ரமணி, பேருராதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கெளமார மடாலயம் குருபர சுவாமிகள் மற்றும் பல முன்னணி தொழிலதிபர்கள், தணியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் என பல முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி குறித்து கோவை சுவர்கா பவுண்டேஷன் சார்பில் ஸ்வர்ணலதா கூறுகையில், கோவையில் ஐந்தாவது பதிப்பாக நடைபெறும் இந்த காலண்டர் வெளியிட்டு விழா நிகழ்ச்சி இதுவரை, அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளதாகவும், இன்றைய உலகில் உடல் ஊனமுற்றவர்கள் கைகளில் இருக்கும் குச்சியினை, ஊன்றுகோலாக தான் அனைவரும் எண்ணுகிறார்கள்,ஆனால் அந்த கோல் தான் இப்புவியினை புரட்டி போடுகின்ற நெம்புகோல் என அனைவருக்கும் நிரூபிக்கும் நோக்கத்தில் இந்திய திருநாட்டின் உள்ள பல மாநிலங்களில் இருந்து 12 ஊனமுற்ற ஜோடிகளை தேர்வு செய்து அவர்களின் புகைப்படங்களை காலண்டரின் ஒவ்வொரு மாத பக்கத்திலும் அச்சிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார் .

மேலும்,சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட காலண்டருக்கு மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்ததாகவும்,இந்த ஆண்டும் அதிக அளவிலான மக்கள் எதிர்பார்க்கும் விதமாக அமைந்துள்ளது என கூறினார். மேலும் இனி வரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் மாற்றத்தினை மாற்று திறனாளிகளும் உருவாக்க முடியும் என கூறினார்.மேலும்,இந்த நிகழ்ச்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் இந்த தேசத்தில் பல மாற்றங்களை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர் இந்த காலண்டரில் இடம் பிடித்த அனைத்து மாற்று திறனாளிகள், கனவன்,மனைவிகள் மற்றும் உடன்பிறப்புகள் அனைவருமே, ஒவ்வொரு துறையிலும் பல சாதனைகள் படைத்து உள்ளனர் என்பது பெரிய அளவில் பாராட்டத்தக்கது என்றும், மாநில மற்றும் மத்திய அரசின் பாராட்டுக்களையும் பெற்று இந்த தேசத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்து வருகின்றனர் அவர்கள் என்றும், அவர்களை நான் பாராட்டுகிறேன் என கூறினார்.கோவையில் ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் ” நான் சிறப்பு மிக்கவன் 2020” காலண்டரின் கவிபொருளாக காதல் மற்றும் காதலுக்கு அப்பால் என்பதே தனி சிறப்பு என கூறினார்.
மேலும்,உடல் ஊனமுற்றவர்கள் இன்றைக்கு அரசுக்கும் அரசு சார்ந்த அனைத்து துறைகளுக்கும் பெரும்பான்மையான முறையில் பணியாற்றி வருகின்றனர் அவர்கள் அனைவருமே பாராட்ட பட வேண்டியவர்கள் இந்திய திருநாட்டின் மாற்றத்தில் நிச்சயம் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு பெரும்பான்மையாக திகழபோவதில் ஐயமில்லை அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து, கோவை மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர்கள் தேவையறிந்து உடனடியாக அளிக்க இந்த அரசு முனைப்புடன் இருப்பதாக தெரிவித்து விடைபெற்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




