17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரம்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாய் கைது செய்யப்பட்ட நபருக்கு சொந்தமான கடையை அப்பகுதி மக்கள் சூறையாடினர். புதுவண்ணாரப்பேட்டை உள்ள நகரில் குளிர்பான கடை நடத்தி வரும் முகமது அலி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

 

இதனிடையே சிறுமிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் அவர் ஏழு மாதம் கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமி அளித்த தகவலின்பேரில் முகமது அலியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களுக்கு சொந்தமான குளிர்பானக் கடை மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

 

மேலும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் சாலையில் வீசி எறிந்து விடுவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Leave a Reply