புதுச்சேரியில் தனியார் பள்ளி ஒன்றில் திடீரென மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கண்டித்ததால் கோரி பெற்றோர் பள்ளி முதல்வரை தாக்கியுள்ளனர். இதனால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கூறி கடந்த இரண்டு நாட்களாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளியை நிரந்தரமாக மூடி வதாகவும் விவரங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்புவதாகவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. திடீரென பள்ளி மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை உணர்ந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.