நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்: அமித்ஷா போட்ட ட்வீட்

நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்று ஹிந்து தினம் கொண்டாடப்படும் நிலையில் அமித்ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து மடலை வெளியிட்டுள்ளார். இதில் நாட்டில் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டுமென்றும் நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால் உலக அளவில் அடையாளப்படுத்த முடியும் என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

 

இந்தியா ஒரே நாடு என்பதை வலியுறுத்தும் முயற்சிக்கான பணிகளை ஒருங்கிணைக்கும் ஒரே மொழி ஹிந்தி என்றும் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரவர் தாய் மொழியை பேசும் அதே வேளையில் ஹிந்தி மொழியும் பயிலவேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹிந்தி தினத்தை ஒட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

 

இந்த செய்தியை அவர் வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். உலகில் 20 சதவீதத்துக்கும் மேலானோர் இந்தி மொழி பேசுகின்றனர். ஹிந்தி மொழியில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திநான் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும், இதனை நாம் பின்பற்றினால் உலகில் அதிகம் பேர் பேசும் மொழியாக ஹிந்தி மாறும் என்றும் அதை பின்பற்றினால் சர்வதேச மொழியாக இந்தி ஐநாசபை அங்கீகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply