கடலூரில் அரசு பேருந்து நடத்துநரின் உயிரிழப்புக்கு காரணமான தலைமை காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
விருத்தாசலத்தில் அரசு பேருந்தில் ஏறிய தலைமை காவலர் டிக்கெட் எடுக்காமல் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் கோபிநாத் உயிரிழந்துள்ளார்.
இதற்கு காரணமான தலைமை காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி போக்குவரத்து கழக ஊழியர்கள் கடலூர் அரசு பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் .உயிரிழந்த கோபிநாத்தின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர் ஊழியர்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






