ஒலிப்பெருக்கி, வாட்ஸ் அப் க்ரூப் மூலம் 2 மாத குழந்தையை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், ரோந்து காவலர்கள் போராடி மீட்டுள்ளனர். ஆனந்த் சாமி மற்றும் ஆர்த்தி தம்பதிக்குக் இரண்டு மாதம் முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் ஆர்த்தி தனது சொந்த ஊரான தேனியில் இருந்தார். திடீரென மூச்சு திணறல் ஏற்பட அருகில் உள்ள தேனி அரசு மருத்துவமனைக்கு கூடி சென்றுள்ளார்.
மூச்சுக்குழாயில் அடைப்பு உள்ளதால் வலிப்பு வந்துள்ளது. இங்கு போதிய வசதி இல்லை, உயர் சிகிச்சைக்காகக் கோவைக்கு அழைத்துச் செல்லுமாறு சொல்லியுளார்கள்.குழந்தையை கூட்டி செல்ல இன்குபேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் தேவைப்பட்டது. சின்னமனூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் சதீஷ்குமார், தனது முயற்சியால், கேரளாவின் திருச்சூரிலிருந்து இன்குபேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்றை தேனி அரசு மருத்துவமனைக்கு வரவழைத்தார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாபர் அலி மற்றும் அவருடன் மருத்துவ உதவியலராக பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அஸ்வின்சந்த் இனைய கிளம்பியது ஆம்பளென்ஸ.போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதனால் தேனி, திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு வாட்சாப் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. ‘தமிழ்நாடு ஆம்புலன்ஸ்’ என்ற வாட்ஸ்அப் க்ரூப்பிலும் உதவிகள் கேட்கப்பட்டது.
உடனடியாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், குழந்தை இருக்கும் ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதபடி, முயற்சிகளை மேற்கொண்டனர். ஒலிபெருக்கி மூலம் வாகனங்களை வழிவிட வலியுறுத்தி முன் சென்றனர். இந்த செய்து அடுத்ததாக சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வாட்ஸ் ஆப் க்ரூப்பிலும் பரவியது. அவர்களும் உதவிக்கு வந்தனர். இவர்களுடன் நெடுஞ்சாலை ரோந்து காவலர்களும், ‘சைரன்’ ஒலி எழுப்பி உதவிக்கு களம் இறங்கினர்.
இவர்களின் கூட்டு முயற்சியால், 240 கிலோமீட்டர், அதாவது சுமார் 5 மணி நேரம் ஆகும் பயணத்தை 2 மணி 55 நிமிடத்திற்குள் கடந்து சென்றுள்ளனர். 3.15 மணிக்கு தேனியிலிருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ் மாலை 6.10 மணிக்கெல்லாம் கோவை தனியார் மருத்துவமனையை சென்றடைந்தது. அங்கு உடனடி சிகிச்சை பெற்ற குழந்தை தற்பொழுது நலமாக உள்ளதாம்.