நலவாரியம் அமைப்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி 8 வது மாநில மாநாடு!

சமையல் தொழிலாளர்களுக்கு நலவரியம் அமைப்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி 8 வது மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.

 

வீடு இல்லாத சமையல் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கி தருவது, மருத்துவ காப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சமையல்  கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இச்சங்கத்தின் தலைவர் முத்து இயல்,இசை, நாடக மன்றத்தின் மூலம் கலைமாமணி விருது வழங்கும்போது சிறந்த சமையல் தொழிலாளர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Leave a Reply