இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் உணவகம் என்ற பெயரில் உதயமானது !

Publish by: --- Photo :


இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் உணவகம் நடைபெற்றது உணவகத்தை N.காமினி, இ.கா.ப.,காவல்துறை துணைத்தலைவர் இராமநாதபுரம் சரகம் அவர்கள் தலைமையேற்று உணவகத்தை திறந்து வைத்தார்.

ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப., இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் குறைந்த விலையில், சுவையான உணவு வழங்கும் நோக்குடன் இந்த உணவகம் உதயமானது. N.காமினி, இ.கா.ப.,காவல்துறை துணைத்தலைவர், ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப., இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரும் உணவு பரிமாறி தொடங்கி வைத்தனர்.வளாகத்தில்
மரக்கன்றுகளும் நட்டனர்.


Leave a Reply