இராமநாதபுரம் எம் எஸ்கே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய ராமலிங்கம். இதே பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இன்றிரவு 9 மணியளவில் அஜித்குமார் வீட்டிற்கு டிப்பன் வாங்க இரு சக்கர வாகனத்தில் கடைக்குச் சென்றார். சிங்காரத்தோப்பு ரயில்வே கேட் பகுதியில் அஜித்குமார் சென்றபோது, விஜயராமலிங்கம் எதிரே ஆட்டோ ஓட்டி வந்தார். தாறுமாறாக சென்ற ஆட்டோவை ஒழுங்காக ஓட்டிச் செல்லுமாறு விஜயராமலிங்கத்திடம் அஜித்குமார் கூறினார். இதன் பிறகு வீடு திரும்பிய அஜித்குமார் அவரது மாமனார் கணேஷுடன் சென்று விஜயராமலிங்கத்திடம் தகராறு செய்தனர்.
இதில் ஆத்திரமடைந்த கணேஷ் , விஜயராமலிங்கத்தின் காதை கடித்தார். விஜய ராமலிங்கம் தாக்கியதில் அஜித்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார். விஜய ராமலிங்கத்தின் காதை கடித்த விவகாரத்தை மறைக்க கபட நாடகமாடுவதாக கூறி கணேஷுடன் விஜயராமலிங்கத்தின் மைத்துனர் கருப்பசாமி தகராறு செய்தார். இதில் ஆவேசமடைந்த கருப்பசாமி இரு சக்கர வாகன சாவியால் கணேஷின் கன்னத்தில் குத்தினார்.
இதில் காயமடைந்த கணேஷின் கன்னத்தில் 12 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கணேஷ், விஜயராமலிங்கம் புகாரில் இளையராஜா, கருப்பசாமி, அஜித் குமார் உள்பட 5 பேர் மீது இராமநாதபுரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.