தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலும், ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக, 59 மக்களவை தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுவரை ஆறு கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது.
அதன்படி, பீகாரில் 8, ஜார்கண்டில் 3, சண்டிகாரில் 1, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 13, உத்தரபிரதேசத்தில் 13, மேற்கு வங்காளத்தில் 9 என, மொத்தம் 59 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலும் நாளை தான் தேர்தல் நடக்கிறது.
அதேபோல், தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. நாளை மாலை 6:00 மணிக்கு பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.