சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்தில் பேராசிரியரிடம் 35 சவரன் நகைகள், பணம் திருட்டு!

சென்னை கோயம்பேட்டில், அரசு பேருந்தில் பயணம் செய்த ஆந்திர மாநில பேராசிரியரின் நகை பையை திருடிச் சென்ற நபரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர் ஜான் கிருபாகரன்; இவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தனது மனைவி பிரசில்லாவுடன் உறவினர் திருமணத்திற்கு கடலூர் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

 

அங்கிருந்து கடலூர் செல்லும் பேருந்தில் ஏறி இருவரும், இருக்கைக்கு மேலே உள்ல இடத்தில் நகை பை மற்றும் உடமைகளை வைத்துள்ளனர். மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே பார்த்தபோது நகை இருந்த பையை மட்டும் காணவில்லை.

 

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் கூச்சலிட்டனர்; பின்னர், கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த பையில், 35 சவரன் நகையும், 19 ஆயிரம் ரூபாயும் இருந்ததாக அளித்த புகாரின் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a Reply