துரோகத்திற்கு துணை போகும் தமிழக அரசு – முத்தரசன் பேட்டி

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய கம்யூ., மாநில செயளாலர் முத்தரசன் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது அவா் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக, மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது . அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி அமைத்துள்ள பல்வேறு சுதந்திரமான அமைப்புகளான தேர்தல் ஆணையம் , ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை போன்ற பல்வேறு அமைப்புகள் சீர்குலைக்கப்பட்டு வருகின்றன. சென்ற தேர்தலில் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணம் மீட்பு, ஒவ்வொருவரின் வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சம் டெபாசிட், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் என்ற எந்த ஒரு வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. நிறைவேற்ற முடியவில்லை. தமிழக மீனவர்களுக்கு தீர்வு காணப்படும்.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசால் இழைக்கப்படும் அநீதிகள் தடுத்து நிறுத்தப்படும். தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படும் என தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றவில்லை. எந்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. அது மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைத்த துரோகம் என்பது வஞ்சகம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. காவிரி நதி நீர், நீட் நுழைவுத்தேர்வு, ஹட்ரோ கார்பன், மீத்தேன் வாயு எடுப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழக மக்களுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து துரோகம் விளைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மாநில அரசு எதிர்ப்பதற்கு பதிலாக வஞ்சகத்திற்கும், துரோகத்திற்கும் துணை போகும் அரசாக தமிழக அரசு உள்ளது. மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போரிடும் அரசியல் யுத்தத்தை தி மு க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. 2004 தேர்தலில் எப்படிப் பட்ட அரசியல் அலை வீசியதோ , அது போன்ற அலை இந்த தேர்தலில் வீசுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பது மட்டுமல்ல. இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் நிச்சயமாக எங்கள் அணி வெற்றி பெறுவோம். மேலும் 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 4 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால் எங்கள் அணி போட்டியிட்டு அதிலும் வெற்றி பெறுவோம். இவ்விரு வெற்றி மூலம் மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மோடி மீண்டும் பிரதமரானால் ஜனநாயகம் முற்றிலும் அழிக்கப்படும். அந்த நிலை ஏற்படாது என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நினைக்கிறது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்வதை தமிழக மக்கள் விரும்பவில்லை.என்றும் மாற்றம் நிச்சயம் உண்டு என்பதை நிரூபித்துக் காட்டுவோம் என்று கூறினார்


Leave a Reply