அதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்…. ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு!

சென்னை: பிரபல காமெடி நடிகர் விஜய் கணேஷ், முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. நடிகர், நடிகைகளை தங்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வைக்க, அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.குறிப்பாக தமிழ்நாட்டில், ஐந்துமுனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது. திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் தங்கள் நடிகர்களை இழுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் விஜய் கணேஷ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ரசிகன் என்பதால் அதிமுகவில் இணைந்ததாக விஜய் கூறியுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வாக்கு சேகரிக்க, தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாகவும் அவர் கூறினார்.


Leave a Reply