CSK: தலைக்கு தில்ல பாத்தியா… காவல் துறை அதிகாரிகள் மீது போலீசில் புகார் அளித்த தோனி

காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் மீது சென்னை அணி கேப்டன் தல தோனி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சென்னை : காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் மீது சென்னை அணி கேப்டன் தல தோனி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
12வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை எதிர் கொண்டது. இதில் சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் தம்மை தொந்தரவு செய்வதாக கூறி போலீசில் தோனி புகார் அளித்துள்ளார்.

தோனியின் புகார்:
தோனி சார்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேலாளர் சென்னை தெற்கு காவல்துறை இணை ஆணையரிடம் நேரில் சென்று புகார் அளித்தார்.
அதில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அடையாற்றில் உள்ள க்ரவுன் பிலாசா நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளனர். இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வரும் காவல்த்துறை அதிகாரிகளின் வாரிசுகள் தோனி உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என பலமுறை, பல்வேறு இடங்களில் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர்.” என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரால் தோனியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்


Leave a Reply