“’லெஜெண்ட்’ நயன்தாரா..!” நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் சார்ந்துள்ள தி.மு.கவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரை இயக்குநர் விக்னேஷ் சிவன் வலியுறுத்தியிருக்கிறார்
`உன்னைப்போல் ஒருவன்’ மற்றும் ‘பில்லா 2’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் கொலையுதிர் காலம். படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் நடிகர் ராதாரவியும் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. பேயாகவும், சீதையாகவும் நயன்தாரா நடிக்கிறார் என்று தொடங்கி அவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராதாரவி பேசியதற்கு சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல்வேறு துறை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ராதாரவி மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரை இயக்குநர் விக்னேஷ் சிவன் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 2018ம் ஆண்டு நடிகை ஒருவர் ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால், அச்சம் காரணமாக, தனது விவரங்களை அந்த நடிகை வெளியிடவில்லை. அதன்பின்னர் சில நாள்களில் நடிகர் ராதாரவி மீடு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.


Leave a Reply