மாதம்தோறும் 10 லிட்டர் பிராந்தி, ரூ. 25,000 பணம்: திருப்பூர் சுயேட்சை வேட்பாளர் உறுதி

திருப்பூரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஏ.எம். ஷேக் தாவூர் நூதனமான வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த இவர் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.திருப்பூரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாதம் தோறும் 10 லிட்டர் பிராந்தி கொடுப்பதாக உறுதி அளித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

17வது மக்களவையைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 11ஆம் தேதியிலிருந்து 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கி போட்டிபோட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் திருப்பூரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஏ.எம். ஷேக் தாவூர் நூதனமான வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த இவர் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 25,000 ரூபாய் நிதி உதவி, மேட்டூரிலிருந்து திருப்பூர் வழியாக அந்தியூர் மற்றும் கோபிச்சட்டிப்பாளையத்துக்கு தண்ணீர் கொண்டுவருவது என பல திட்டங்களைக் கூறும் அவர், மாதம் தோறும் 10 லிட்டர் பிராந்தி கொடுப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் திருமணத்துக்கு 10 தங்கக் கட்டிகள், 10 லட்சம் ரூபாய் நிதி ஆகியவற்றை எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தருவேன் என்றும் சொல்கிறார்


Leave a Reply