கோவை:விவசாயிகள் பாதிப்பு, புயல் சேதம் என பல பிரச்னைகளில் தமிழகத்தை மத்தியில் ஆளும் கட்சி கண்டுகொள்ளாததற்கு தமிழிசையும், ஹெச்.ராஜாவுமே காரணம் என்று கமல்ஹாசன் குற்றம்சாட்டி இருக்கிறார்.
தமிழகத்தில் மற்ற கட்சிகளை போன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் களத்தில் குதித்துள்ளது. அதற்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் கமல்ஹாசன் வெளியிட்டார். இந்நிலையில் எஞ்சிய 18 தொகுதி வேட்பாளர்களை கோவை கொடீசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் வெளியிட்டு பேசினார். கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பிரதமர் மோடி மக்களின் காவாலளி அல்ல… பணக்காரர்களின் காவலாளி. தமிழகத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதற்கு 2 பேர் காரணமாக இருக்கிறார்கள்.ஒன்று தமிழிசை சவுந்திர ராஜன், மற்றொருவர் இருக்கிறார்… கேட்டால் நான் பண்ணவில்லை.. அட்மின் தான் என்பார்.(மறைமுகமாக ஹெச்.ராஜாவை குறிப்பிடுகிறார்)