ஆளுநர் தரப்பில் சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறோம்..!
முதலமைச்சரும் ஆளுநரும் சந்தித்து பேசி பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டுவர மீண்டும் வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் ஏன் எல்லா விவகாரத்திலும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் நினைக்கிறாரா என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர உத்தரவிட கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவுடன் அவசர அவசரமாக மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மசோதாக்களை குடியரசுத் தலைவர் அனுப்பி வைப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
முதலமைச்சர் மசோதா விவகாரத்தில் ஆளுநரை நேரில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து ஆளுநர் தரப்பில் ஏதாவது சில முன்னேற்றங்களை தாங்கள் எதிர்பார்ப்பதாக கூறிய தலைமை நீதிபதி முதலமைச்சரும் ஆளுநரும் சந்தித்து பேசி பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வர தங்கள் மீண்டும் வலியுறுத்திவிடாமல் தெரிவித்தார்.





