பள்ளி மாணவர்கள் மீது மோதிய தண்ணீர் வாகனம்..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தண்ணீர் வாகனம் மோதியதில் பள்ளி மாணவனின் கால் முறிந்தது தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் முகமது மற்றும் முகமது ஆதின் இருவரும் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மீது தண்ணீரை ஏற்றி வந்த மினி சரக்கு வாகனம் மோதி உள்ளது. இதில் ஒருவருக்கு லேசான காயமும் முகமது ஆதினுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடைய பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பெற்றோர் போராட்டம் செய்தனர். இதனால் இருபுறமும் வாகனங்கள் தேங்கி நின்றன.





