--- --:--:-- --

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!

10

ழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.04) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார். சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கன மழை கொட்டியது.

 

இதனால் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இரவு முழுவதும் இப்பகுதியில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் கால் வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

 

இதனால் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது. மொத்தத்தில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வடியவைக்கவும், மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon