--- --:--:-- --

துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை துடைப்பத்தால் துரத்திய பெண்..!

2

துடைப்பத்தால் பெண்கள் புலியை விரட்டிய வரலாற்றை கேட்டிருப்போம். ஆனால் ஹரியானா மாநிலத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை பெண் ஒருவர் துடைப்பத்தால் விரட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் வீட்டின் முன்பு இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் வந்தனர். அதில் இரண்டு நபர்கள் திடீரென்று துப்பாக்கியை எடுத்து நின்று கொண்டிருந்த நபர் மீது சுட தொடங்கினார்.

 

பதறிப்போன அவர் அலறியடித்து வீட்டுக்குள் ஓடினர். அப்பொழுதும் வீட்டின் நுழைவு வாயில் அருகே வந்து அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கிடையே சத்தம் கேட்டு துடைப்பத்தை தூக்கி கொண்டு வந்த பெண் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்த நபர்களை விரட்ட துவங்கினார்.

 

இதையடுத்து அவர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை துடைப்பத்தை கொண்டு விரட்டிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்படும் நிலையில் துணிச்சலுடன் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண்ணின் செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

Right Menu Icon