கணவனை கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி..!
மதுரை அருகே கணவனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
குட்லாடம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணை 8 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
ராஜ்குமார் வேலைக்கு சரிவர செல்லாமல் அடிக்கடி மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ராஜ்குமார் மீண்டும் மனைவியிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மஞ்சுளா நைலான் கயிற்றால் கணவரின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் மது போதையில் கணவனை கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ளார். மகனின் இறப்பில் இருப்பதாக சந்தேகம் இருப்பதாக ராஜ்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மனைவியை கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடியது அம்பலமானது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





