ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
கேரளாவில் ஆசை ஆசையாக முறுக்கு சாப்பிட குழந்தையின் தொண்டையில் முறுக்கு சிக்கிக் கொண்டதால் குழந்தை இறந்து போனது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிகரா பகுதியை சேர்ந்தவர் விஜயஸ் என்பவரின் மகள் வைஷ்ணவி ஒரு வயது நிரம்பிய வைஷ்ணவி இன்று காலை ஆசை ஆசையாக முறுக்கு சாப்பிட்டு உள்ளார்.
தாய்க்கு தெரியாமல் எடுத்து சாப்பிட்டதாக தெரிகிறது. அப்பொழுது முறுக்கு தொண்டையில் சிக்கிக்கொண்டது. அழுத குழந்தையை தாய் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். வைஷ்ணவியின் தந்தை சொந்த வேலை காரணமாக பாலக்காடு சென்ற பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





