உளுந்தூர்பேட்டையில் செல்ஃபி மோகத்தால் நேர்ந்த துயரம்..!
உளுந்தூர்பேட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் ரயில் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது உயர் மின் அழுத்தக் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் சதிஷ்குமாரின் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





