கர்நாடகத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை அந்தப் பகுதி இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அங்குள்ள யாச்சனஹள்ளி எனும் கிராமத்தில் அடிக்கடி வன விலங்குகள் புகுந்து ஆடு கோழிகளை அடித்து உண்பது தொடர்ந்து நடந்து வந்தது.
சிறுத்தை ஒன்று அங்கு புகுந்ததை அடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிறுத்தையை மடக்கிப் பிடித்து கால்களை கயிற்றால் கட்டி வைத்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினரிடம் சிறுத்தை ஒப்படைக்கப்பட்டது.