காதல் தோல்வியால் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞர்..!

சென்னையில் காதல் தோல்வியால் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞரை போலீசார் காப்பாற்றி கரை சேர்த்தனர். பெசன்ட் நகர் கடற்கரையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென கடலுக்குள் நீந்தி சென்று தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

 

அங்கு பணியில் இருந்த போலீசார் 2 பேர் உடனடியாக கடலுக்குள் சென்று அந்த இளைஞரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

 

விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் சென்னையில் பணியாற்றும் போது பெண்ணுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.