சொத்திற்காக கொளுந்தனை கொலை செய்த பெண்..!

காஞ்சிபுரம் மாவட்டம் திருமங்கலம் அருகே சொத்திற்காக அன்னியே கொழுந்தனை கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

செவிலிமேடு அருகே கொஞ்சி அடைக்கன் என்பவர் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

 

இது தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணையில் கொஞ்சி அடைக்கன் மற்றும் அவரது அண்ணி சித்ரா ஆகியோர் இடையே முறையற்ற உறவில் இருந்து வந்ததும் ஒன்றரை கோடி ரூபாய் சொத்திற்காக சித்ராவே ஆள் வைத்து அடைக்கனை கொலை செய்தது தெரியவந்தது.