சாலையில் கிடந்த பள்ளி சான்றிதழ், பணம் நகையை காவல்துறையினரிடம் ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டும் பரிசும் வழங்கிய கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர்

இராமநாதபுரம் பட்டினம் காத்தான் நகரை சேர்ந்த குணசேகரன் மனைவி செல்வி என்பவர் 16.04.2020 தேதி அன்று கீழச்செல்வனூர் காவல் நிலையசரகம் கோட்டையேந்தல் கிராமத்தில் இருக்கும் தனது தந்தை வீட்டிற்கு வருவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது பையில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் பள்ளி சான்றிதழ்கள், பணம் ரூபாய் 1000/- ஆகியவை வரும் வழியில் தவற விட்டுவிட்டார்.

 

இதனை சிக்கல் வடக்கு தெருவை சேர்ந்த நாகவேல் மகள் சந்தனமாரி வயது 20 என்பவர் கீழே விழுந்த பொருட்களை எடுத்து சிக்கல் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மலைராஜிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து தவறவிட்ட பொருளை காவல்துறையினரிடம் கொடுத்ததையடுத்து உரியவர்களிடம் பொருள்கள் ஒப்படைக்கப்பட்டது.

 

இந்நிலையில் இன்று கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிக்கல் வட்ட காவல் ஆய்வாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர் மலைராஜ் ஆகியோர் சந்தனமாரிக்கு மின்விசிறி, 25 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்களை பரிசளித்து கௌரவபடுத்தினர்.