குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் கண்டெடுக்கப்பட்ட கருப்பு பெட்டியின் ஆய்வு முடிவுகள் எப்பொழுது தெரிய வரும் என கூற இயலாது என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 8ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதில் பயணித்த 14 பேர் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு பெட்டியை கண்டெடுத்து பாதுகாப்புடன் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளன.
இதன் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறும்போது கருப்பு பெட்டி தற்போதைக்கு எந்த இடத்தில் இருக்கிறது என்பது தங்களுக்கு தெரியாது எனவும் இதனால் முடிவுகள் எப்போது கிடைக்கும் என்று கூற இயலாது எனவும் தெரிவித்தனர்.
சில விபத்துகளில் கருப்புப் பெட்டியின் ஆய்வுகள் இரண்டு நாட்களில் முடியும் எனவும் சில கருப்பு பெட்டியின் ஆய்வுகள் வெளியாக மூன்று ஆண்டுகளும் எடுத்து இருக்கின்றன எனவும் கூறியுள்ளார்.