சக்கர நாற்காலியில் இருந்தாவது பிரச்சாரம் செய்வேன் : மம்தா பானர்ஜி

ர்மநபர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் இருந்து பிரச்சாரம் செய்யப் போவதாக மருத்துவமனைக்குள் இருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

நந்திகிராம் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு நேற்று கொல்கத்தாவில் இருந்த நிலையில் மம்தா பானர்ஜி மர்ம நபர்களால் தள்ளிவிடப்பட்டு பலத்த காயமடைந்தார். காலில் எலும்பு முறிவு, தோள்பட்டையில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மம்தாவுக்கு 9 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

4 நாட்களுக்கு ஓய்வு அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேற்கு வங்கத்தின் முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட இருந்தது. ஆனால் அதற்குள் மம்தா மீதான தாக்குதல் மேற்கு வங்கத்தை உலுக்கியுள்ளது.

 

மருத்துவமனையில் உள்ள புகைப்படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டும் போராட்டங்களில் ஈடுபடும் விதமாக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ள மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் இருந்தாவது பிரசாரம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.