மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு உள்ள கோவில் ஒன்றில் அவர் வழிபாடு நடத்தி விட்டு வெளியே வரும்போது நான்கு நபர்கள் அவரை தள்ளியதாகவும் தாக்கப்பட்டதாகவும் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மம்தா பானர்ஜிக்கு காலில் காயம் பட்டிருக்கிறது என்றும் முகத்திலேயே சிராய்ப்புகள் இருக்கின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அவரால் அந்த சமயத்தில் கீழே விழுந்து விட்டதால் நடக்க முடியவில்லை என்றும் அவர் அங்கிருந்து தூக்கி வந்து வாகனத்தில் வைக்கப்பட்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.