கேப்டன் எம்எஸ்தோனி வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வைரல்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ்தோனி வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

 

இதற்காக கடந்த வாரம் சென்னை வந்த தோனியை மார்ச் 9ஆம் தேதி முதல் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டார். அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.