உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக முத்திரை

இளைஞர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக முத்திரை பதிப்பார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினை திமுகவின் தலைவர் என அடையாளம் காட்டப்படுவதாக மூத்த பத்திரிக்கையாளர் ஸ்ரீநிவாசன் தெரிவித்து உள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி நியமித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

திமுக பொது செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில் திமுக இளைஞர் அணி செயலாளராக உள்ள சாமிநாதன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அவருக்கு பதிலாக திமுக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின் படி உதயநிதி ஸ்டாலின் அந்த பொறுப்பில் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையை ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டில் சென்று வாழ்த்துகளை பெற்றார்.இதை திமுக நிர்வாகிகள் பலரும் வரவேற்று உள்ளனர்.