ஒரு சின்னத்திற்கும் மற்ற சின்னத்துக்கு வேறுபாடு இருக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது புதிய தமிழகம் கட்சி கட்சிக்கு டிவி சின்னம் வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்கவும் ஆணையிட்டுள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில் பதிவு செய்யப்பட்ட தங்கள் கட்சிக்கு பொது சின்னமான தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும் தொலைக்காட்சி சின்னத்தைப் போல இருக்கும் கரும்பலகை, குளிர்சாதனப்பெட்டி, எழுது பலகை, தீப்பெட்டி போன்ற சின்னங்களை பொது சின்னங்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு வேறுபடுத்தி அடையாளம் காணும் வகையில் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் புதிய தமிழகத்திற்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவெடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.