கர்ப்பிணி 1600 கி.மீ நடந்து செல்ல முயன்ற அவலம்…உதவிய போலீசார்!

ஊரடங்கால் உண்ண உணவு கிடைக்காததால் ஐந்து மாத கர்ப்பிணி 2 வயது குழந்தையுடன் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு நடந்து செல்ல முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்கட்டளை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 11 பேர் கட்டட வேலை செய்து வந்தனர். ஊரடங்கால் வேலையின்றி உண்ண உணவு கிடைக்காததால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதையடுத்து ஐந்து மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உட்பட 5 பேர் நடைபயணமாக ஆந்திரா செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு கீழ்க்கட்டளையில் நடக்கத் தொடங்கியவர்கள் இரவு 8.30 மணிக்கு தாம்பரத்தை அடைந்தனர். அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் நடைபயணமாக ஆந்திரா செல்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை உடனடியாக உணவு வழங்கி அழைத்துச் சென்றனர்.

 

புதுச்சேரியில் யூடியூப் ஐ பார்த்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை அடிக்க முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்டேட் வங்கி தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் கடந்த 12ம் தேதி நுழைந்த நபர் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணம் திருட்டு முயற்சியில் ஈடுபட்டபோது அலாரம் ஒலித்ததால் தப்பியோடினார்.

 

சிசிடிவி பதிவை கொண்டு அது விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சநல்லூரில் சேர்ந்த பிரபு என்கிற அப்பு என்று அடையாளம் கண்டு போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் வீட்டில் யூ டியூப் பார்த்து கொள்ளை அடிக்க வந்தது தெரியவந்தது. பிரபுவை கைது செய்த போலீசார் அவர் பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.