திருச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகை கடையில் கடந்த 2 ஆம் தேதி நள்ளிரவில் அது 3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடை சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 28 கிலோ நகைகளை அள்ளிச் சென்றனர். இந்த கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள திருச்சி காவல்துறை சார்பில் 7 தனிப்படைகள் தஞ்சை போலீஸ் தரப்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
திருவாரூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகனும் அவரது அக்காள் மகன் சுரேஷும் தான் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டவர்கள் என்பது திருவாரூர் மாவட்டம் வாகன சோதனையில் சிக்கிய மணிகண்டன் மூலம் அம்பலமானது. அவனிடமிருந்து லலிதா ஜூவல்லரி நகை கடைக்கு சொந்தமான நான்கரை கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிகண்டன் ஐயும் சுரேஷின் தாய் கழக வலுவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சுரேஷ் மற்றும் உறவினர்கள் 20 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அந்த விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் முருகனையும் சுரேஷ் செய்யும் பிடிப்பதற்காக அண்டை மாநிலங்களுக்கு தனிப்படைகள் விரைந்தனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். அவனை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து செங்கம் காவல் துறையினர் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.