ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை..!

கொரொனா பரவலை தடுக்கும் வகையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் இன்றும், நாளையும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

 

விடுமுறை நாள் என்பதால் இன்று ஏற்காட்டிற்கு செல்ல கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் வந்தனர். இவர்களை ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினார்.

 

அந்த பகுதியில் வசிப்பவர்கள் ஆதார் கார்டை காண்பித்து சென்ற நிலையில் ஏற்காட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் 2 தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.