திருப்பூர் மாநகராட்சி எஸ்பி நகர் பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து மக்கள் சாலை மறியல்

திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்குட்பட்ட 25-வது வார்டு எஸ்பி நகர் பகுதியில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

எஸ்.பி.நகர் பகுதியில், பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருவதால், குடிநீர் வர தடைபட்டது. பலமுறை அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இன்று காலை எஸ்.பி.நகர்- வேலம்பாளையம் செல்லும் சாலையில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்குவதாக உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.