நாளை முதல் தென் தமிழக கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை..!

நாளை முதல் 12ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

குமரி கடல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் காற்றின் சுழற்சி காரணமாக நாளை முதல் 15ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு, பாபநாசத்தில் இரண்டு சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நாகர்கோவிலில் தலா இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.