பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கம் உள்ளவர்களாகவும், ஜனநாயக மனோபாவத்துடன் இருப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுவாமி சித்பவானந்தாவின் டிஜிட்டல் பகவத்கீதையை காணொளி மூலமாக மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது பேசிய அவர் பகவத்கீதை தம்மை சிந்திக்க வைப்பதாகவும், சுயசார்பினரின் பிரதான நோக்கம் மனித குலத்திற்கான வளங்களை உருவாக்குவதுதான் என்றார்.