மூடப்படாத ஆழ்துளை கிணறு! பொது மக்களுக்கு விழிப்புணர்வு

மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து பொதுமக்கள் முன் வைக்கப்படுகிறது. மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டால் அவை மூடப்பட உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசு அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கட்டும் என்று எண்ணாமல் செயலில் இறங்குவோம். இதுதான் நாம் சுஜித் சம்பவத்திலிருந்து கற்க வேண்டிய விஷயங்களாக உள்ளன.

 

புதிதாக ஆழ்துளை கிணறுகளை தோண்டுவதாக இருந்தால் கண்டிப்பாக விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். விதிகளை பின்பற்றாமல் யாரேனும் செயல்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் எடுத்துரைக்க வேண்டும். அறிவுரை அளித்த பிறகும் அலட்சியமாக இருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முனைய வேண்டும்.

 

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் விஷயத்தில் குற்றமற்ற விழிப்புணர்வை கொண்டிருக்கவேண்டும். விழிப்புணர்வு முன்பு இருந்திருந்தால் குழந்தைகள் கண்டிப்பாக இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இனியாவது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை குழந்தையின் மூலம் நாம் கற்கும் பாடமாக இருக்கட்டும். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பாதிக்கப்படக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் உறுதியாக இருக்க வேண்டும் ஒருபோதும் ஆழ்துளை கிணறுகளை இனிமேல் திறந்தபடியே விட்டுவிடாமல் இருக்கவேண்டும்.