கொலம்பியாவை சேர்ந்த இளைஞர் தனது கழுத்தின் பின்புறத்தில் க்யூ ஆர் கோடு டாட்டு வரைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். லாலீன்றா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான இளைஞர் கடந்த மாதம் க்யூ ஆர் கோட் டேட்டூவை உண்மையில் வேலை செய்யுமா என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவருடைய கழுத்தில் இருந்த கோடை ஒருவர் கேமராவில் ஸ்கேன் செய்தபோது அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் திறக்கிறது. இந்நிலையில் சில வாரங்களுக்கு பிறகு அந்த க்யூ ஆர் கோடு வேலை செய்யவில்லை என அவர் தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார்.
தோலில் ஏற்பட்ட மாற்றம் அல்லது நிறம் மாறியதால் க்யூ ஆர் கோடு வேலை செய்யாமல் போனதற்கு காரணமாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.