பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கேக்கில் இருந்த குச்சி குத்தியதால் பார்வைபறிபோகும் நிலையில் இருந்து சற்று தப்பியுள்ளார் ஒரு பெண். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

சமீபகாலமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கேக்கை முகத்தில் பூசி அதன் மூலம் அனைவரும் சந்தோஷம் கொள்வார்கள் என்ற நினைப்பில் அந்த அழகான கேக்கை அலங்கோலமாக மட்டுமின்றி இந்த வேடிக்கையான செயல்களால் பிறந்தநாள் கொண்டாட்டமானது மிகவும் ஆபத்தானதாக மாறும் என்பதற்கு நாம் பார்க்கப்போகும் இந்த செய்தி சான்றாகும்.

 

அந்த புகைப்படங்களில் முதலில் பிறந்த நாளன்று கேக்கில் ஒரு மரக்குச்சி ஒன்று நின்று கொண்டிருப்பதைக் காணலாம். இரண்டாவதாக ஒரு மரக்குச்சி பெண்ணின் கண்ணின் சற்று மேலே உள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தனது பிறந்தநாளை கொண்டாட கேக் வெட்டிய போது அவளுடைய நண்பர்கள் அவளுடைய முகத்தை கேக்கில் அமித்தியுள்ளனர்.

 

அப்போது அதிலிருந்த மரக்குச்சி ஒன்று அதாவது கண் பகுதியில் சிக்கி உடனடியாக ரத்தம் வெளியேறத் தொடங்கியுள்ளது. அப்போது அந்தப் பெண் திடீரென வலியால் துடித்ததை தொடர்ந்து அவரது நண்பர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.